பிரதிநிதித்துப் படம் 
தமிழகம்

சென்னையில் அதிமுக நிர்வாகி கொலை: 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை, பெரம்பூரில் அதிமுக கிளைச் செயலாளராக இருப்பவர் இளங்கோவன். இவர் இன்று (மார்ச் 28) காலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்தவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, பெரம்பூர் பகுதியைச் சஞ்சய் (19), கணேசன் (23), வெங்கடேசன் (30), அருண்குமார் (28), மற்றும் சிறுவன் ஒருவர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 5 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT