தமிழகம்

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வழக்கில் இன்று தீர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ்மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணையை நீதிபதி கே.குமரேஷ்பாபு, மார்ச் 22-ம் தேதி7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தார். ஓபிஎஸ், இபிஎஸ் என இருதரப்பிலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT