தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று திமுக, தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக உறுப்பினர் மு.க.ஸ்டாலின், மக்கள் பிரச்சனைகளை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாக கூறினார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும், மாநிலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர, அவைத் தலைவர் தனபாலனிடம், திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் மறுத்துவிட்டார். கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் திமுக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அவைக்கு வெளியே வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, அவையில், மக்கள் பிரச்சனைகளை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்வதாக குற்றம்ச்சாட்டினார்.