தமிழகம்

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிடும்படியான மக்கள் நலத் திட்டங்கள் ஏதுமில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், நடப்பாண்டு பட்ஜெட் தொடர்பாக மேயர் ஆர்.பிரியா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு, மக்களின் தேவைகள், சாத்தியமுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தி,பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா முன்னிலையில், நிலைக் குழுத் தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயா தாஸ் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். வரும் 28-ம் தேதியும் மன்றக் கூட்டம் நடைபெறும். அதில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT