சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை யகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 16 மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. உடன் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு, மாநிலச் செயலாளர் சிவ.இளங்கோ உள்ளிட்டோர். 
தமிழகம்

மநீம மாவட்டச் செயலாளர்களுடன் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 16 மாவட்டச் செயலாளர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தொடர்ச்சியாக இந்தப் பணிகளை கமல்ஹாசன் மேற்பார்வையிடுவதோடு, கட்சியினருக்கு தொடர்ந்து ஆலோசனையும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், வடசென்னை,தென்சென்னை, மத்திய சென்னைமற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மண்டலச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமையகத்தில் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

அதன்படி, அமைப்பு ரீதியான16 மாவட்டச் செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் தலைமை வகித்தார்.

இதில் பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதில், கட்சியின்துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு, மாநில செயலாளர் சிவ.இளங்கோ பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT