சென்னை: தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 முறை இயக்கப் படும் விரைவு ரயில் சேவை ஏப்.8 முதல் தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறும்போது, ‘‘செங்கோட்டையில் இருந்து பாவூர்சத்திரம், அம்பை, திருநெல்வேலி வழியாக தாம்பரத்துக்கு நிரந்தர ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.
பாவூர்சத்திரம், அம்பை, திருநெல்வேலி, விருதுநகர், காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக இயக்கப்பட உள்ள இந்த ரயிலுக்கு ‘தாமிரபரணி எக்ஸ்பிரஸ்’ என பெயரிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.