தமிழகம்

விழுப்புரம் | சவப்பெட்டியில் மின்சாரம் தாக்கி 15 பெண்கள் மயக்கம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கயல்விழி (17) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இவரது உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்த குளிர்பதன சவப்பெட்டியில் (ப்ரீசர் பாக்ஸ்) வைத்தனர்.

நேற்று பிற்பகல் இறுதி அஞ்சலி செலுத்த அப்பகுதி மக்கள் திரளாக வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பிரிசர் பாக்ஸிலிருந்து மின்சாரம் தாக்கியது.

இதில் அதே பகுதி யைச் சேர்ந்த எழிலரசன் மனைவிசெல்வி, அழகேசன் மனைவி சுந்தரி, ஆறுமுகம் மனைவி கோமதி, வீரன் மனைவி பச்சையம்மாள், பூபாலன் மனைவி கீர்த்தி, வெங்கடேசன் மகள் நிஷா உட்பட 15 பெண்கள் மயக்கமடைந்தனர். இதில் 10 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் செல்வி,சுந்தரி, கீர்த்தி, நிஷா ஆகியோர் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும், 3 பேர் விக்கிரவாண்டி அரசு மருத்துவ மனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

SCROLL FOR NEXT