தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாவட்ட நீதிபதி வடமலை நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, மாவட்ட நீதிபதி பி.வடமலையை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட நீதிபதியாக பதவி வகித்து வரும் பி.வடமலையை, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்க ஏற்கெனவே மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலையை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள பட்டு தேவ் ஆனந்த், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள தேவராஜூ நாகார்ஜூன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இடமாற்றம் செய்தும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் மூவரும் விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.

மாவட்ட நீதிபதிகளாக உள்ள 4 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் அண்மையில் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT