ராமதாஸ் | கோப்புப் படம். 
தமிழகம்

தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதா தாக்கல்: ராமதாஸ் வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவு தாக்கலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்படுகிறது. சூதாட்டத் தடை சட்டத்தை தமிழக அரசு மீண்டும் தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். 2021-ஆம் ஆண்டு சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 47 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் புதிய சட்டம் மிகவும் தேவை ஆகும்.

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தின் தேவையை ஆளுநர் உணர வேண்டும். இந்த சட்டத்திற்கு இப்போது ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டியது அரசியலமைப்பு சட்டத்தின்படி கட்டாயம் என்பதால் அதை அவர் உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT