சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக நாட்டுத் துப்பாக்கியை கொண்டு வந்த பெண்கள். 
தமிழகம்

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கியை ஒப்படைக்க வந்த பெண்

செய்திப்பிரிவு

சேலம்: கணவர் பயன்படுத்தி வந்த உரிமம் பெற்ற நாட்டுத் துப்பாக்கியை, அவர் இறந்துவிட்டதால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த தாய் மற்றம் மகளால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்காட்டில் அசம்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிவேல் என்பவரின் மனைவி பார்வதி (56), அவரது மகள் சுமதி ஆகியோர் காரில் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நேற்று வந்தனர்.

இந்நிலையில், காரில் இருந்து நாட்டுத் துப்பாக்கியுடன் பார்வதி இறங்கியதைக் கண்ட போலீஸார், அவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில், அசம்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிவேல், காவல்துறையில் உரிமம் பெற்று, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

உடல் நலக்குறைவால், பழனிசாமி இறந்துவிட வே, நாட்டுத் துப்பாக்கியின் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. எனவே, அந்த துப்பாக்கியை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க, அவர்கள் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சேலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, துப்பாக்கியை ஒப்படைக்க விண்ணப்பிக்கும்படி, பார்வதி, சுமதி ஆகியோரை போலீஸார் அனுப்பி வைத்தனர். நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, தாயும் மகளும் ஆட்சியர் அலுவலகம் வந்தது, அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT