கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு அளவீடு செய்ய வந்த என்எல்சி அதிகாரி களை பொதுமக்கள் திருப்பி அனுப்பினர். அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 10-க்கும் மேற்பட்டோர் தீக்குளிக்க முயன்றனர். போலீஸார் அவர் களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் இரண்டாவது சுரங்கவிரிவாக்கத்துக்காக சேத்தியாத் தோப்பு அருகே உள்ள கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, அம்மன்குப்பம், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தும் பணியை சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமா தேவி, அம்மன்குப்பம், ஆதனூர் உள்ளிட்ட கிராம மக்களின் கோரிக் கைகளை என்எல்சி இந்தியா நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், வேளாண் மற்றும் ஊழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தலை மையில் பேச்சுவார்த்தை நடத்தி, வீட்டிற்கு ஒருவருக்கு வேலை, நிலத்திற்கு உரிய இழப்பீடு, மாற்றுக் குடியிருப்பு வழங்குவதாக பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு வளையமாதேவி பகுதியில் என்எல்சி நிர்வாகம் நிலங்களை கையகப் படுத்திய இடத்தில் வரையறை செய்தது. அதைத்தொடர்ந்து நேற்று கரிவெட்டி கிராமத்துக்கு என்எல்சி அதிகாரிகள் மற்றும் நில எடுப்பு வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று வீட்டு மனைகளை அளவீடு செய்தனர். இதற்கு அக்கிராம மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்து அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன் குமார் மற்றும் போலீஸார் கரி வெட்டி கிராமத்துக்கு சென்றனர். கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து டிஎஸ்பி ரூபன்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், “இந்தப் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்கள் நிலங்களை கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு இதுவரை வரவில்லை.
மேலும் வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை, நெய்வேலி ஆர்ச்கேட் அருகே ஒரே இடத்தில் குடியிருப்பு அமைத்து தர வேண்டும். வீட்டுமனைக்கு மூன்று லட்சம்இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை அளவீடு செய்யக் கூடாது” என்று கோரிக்கை வைத் தனர். இதையடுத்து அனைத்து அதிகாரிகளும் திரும்பிச் சென்ற னர். அக்கிராமத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.