சங்கராபுரம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து திமுக பொதுக் கூட்டத்திற்காக போடப்பட்டுள்ள நாற்காலிகள். 
தமிழகம்

கள்ளக்குறிச்சி | சங்கராபுரத்தில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து பொதுக்கூட்டம்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் பேருந்து நிலை யத்தை ஆக்கிரமித்து திமுக பொதுக்கூட்டம் நடத்தியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நேற்று திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்திற்காக பேருந்து நிலையப் பகுதியில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு, கூட் டத்திற்கு வருவோர் அமர பேருந்துநிலையம் முழுவதும் நாற்காலிகள் போடப்பட்டு, ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.

இதனால் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆங்காங்கே சாலையோரம் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லு மாறு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கச்சிராயப் பாளையம் மார்க்கமாக செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் பேருந்துகள் ஆங்காங்கே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டனர்.

பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது குறித்து சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதியை தொடர்பு கொண்டு கேட்டபோது, திருக்கோவிலூர் டிஎஸ்பியிடம் கேளுங்கள் என்று கூறினார். இதையடுத்து திருக்கோவிலூர் டிஎஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை என்றனர்.

பொதுப்போக்குவரத்து நிறுத்துமிடத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை எவ்வாறு அனுமதி அளித்தது? பொதுமக் களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு காவல்துறை துணை போவதேன்? என்ற கேள்விபரவலாக எழுந்தது. ஆளும் கட்சியினரின் இந்த செயல் பொது மக்களிடையே முகச்சுளிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி யுள்ளது. கூட்டத்திற்கு வருவோர் அமர பேருந்து நிலையம் முழுவதும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

SCROLL FOR NEXT