தமிழகம்

விவேகானந்தர் மண்டபம் வந்ததை பாக்கியமாக உணர்கிறேன் - குடியரசுத் தலைவர் பதிவு

எல்.மோகன்

நாகர்கோவில்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு வரும் முக்கிய பிரமுகர்கள் கருத்துக்களை பதிவு செய்யும் பதிவேட்டில் தனது கருத்தை ஆங்கிலத்தில் பதிவு செய்தார்.

அதில், "விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்கு வந்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். ஆன்மிகம் நிறைந்த இந்த மண்டபத்தை கட்டுவதற்கு பின்னணியில் இருந்த மறைந்த ஏக்நாத் ரானடேஜியின் மகத்துவத்தையும், விவேகானந்தர் மீதான பற்றுதலையும் கண்டு வியக்கிறேன்.

சுவாமி விவேகானந்தரின் மகத்தான பணியின் அடையாளமான அவரது நினைவிடத்திற்கு வந்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன். விவேகானந்த கேந்திரத்தின் செயல்பாடுகள் மூலம் சுவாமிஜியின் செய்தியைப் பரப்பும் மக்களின் பக்தியைப் பாராட்டுகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

SCROLL FOR NEXT