சென்னையில் மழை | கோப்புப் படம் 
தமிழகம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வட உள்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 19ம் தேதி வரை, தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று (மார்ச் 17) காலை முதல் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, புரசைவாக்கம், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (12 மணி முதல் ) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT