சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளதாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எமஎல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று (மார்ச்.16) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை இன்று (மார்ச். 16) தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கக் கூடிய சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர் அளித்த பேட்டியில், "ஈவிகேஎஸ் இளங்கோவன் நன்றாக உள்ளார். 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு வீடு திரும்புவார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரை பார்த்தார். அவருக்கு இருமல் அதிகமாக இருந்தது. 2 நாட்களில் அது சரியாகிவிடும். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு இன்று மாலை மாற்றப்படுவார்" என தெரிவித்தார்.