கொடைக்கனல் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் கருகிய தாவரங்கள். 
தமிழகம்

கொடைக்கானல் வனப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ: விடிய விடிய தீயை அணைத்த வனத்துறை

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை விடிய விடிய போராடி வனத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டுத் தீயால் நகர் பகுதி முழுவதும் புகை மண்டலமானது.

கொடைக்கானல் வனப்பகுதியில் சில நாட்களாக கடும் வறட்சி நிலவி வருகிறது. காய்ந்த சருகுகளில் தீப்பற்றி அடிக்கடி காட்டுத் தீ பரவி வருகிறது.

இதில் அரிய வகை மரங்களும், தாவரங்களும் கருகி வருகின்றன. வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு வருவதால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அவ்வப்போது காட்டு மாடுகள், மான்கள் நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

நகர் பகுதி முழுவதும் பரவிய புகை மண்டலம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் நகர் பகுதியை ஒட்டியுள்ள சிட்டிவியூ பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான மரங்களும், தாவரங்களும் தீயில் கருகின. வனத்துறையினர் விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீயால் நேற்று நகர் பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

SCROLL FOR NEXT