ஆம்பூர் நகராட்சியில் நேற்று நடந்த மன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
தமிழகம்

ஆம்பூர் நகர்மன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்களிடையே தள்ளுமுள்ளு

செய்திப்பிரிவு

ஆம்பூர்: ஆம்பூர் நகர்மன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

ஆம்பூர் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் ஷகிலா முன் னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், மேலாளர் நீஷாத், துப்புரவு ஆய்வாளர்கள் பாலசந்தர், சீனிவாசன் உள்ளிட் டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பாஜக ஆதரவு சுயேட்சை உறுப்பினரான அர்ஷா தன்னுடைய வார்டில் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. இது தான் திராவிட மாடல் ஆட்சியில் நடைபெறும் பணிகளா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்து குரல்எழுப்பினர்.

உறுப்பினர் அர்ஷாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பினர். அதனால் நகர் மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. அதைத் தொடர்ந்து திமுக -அதிமுக உறுப்பினர்களிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர் சுரேஷை திமுக உறுப்பினர் சுதாகர் பிடித்துதள்ளினார். அதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற் பட்டது. பிறகு உறுப்பினர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு: வசந்த்ராஜ்: ஏ-கஸ்பா பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை ஏற்படுத்த வேண்டும். ஏ-கஸ்பா மெயின் ரோடில் சாலை அமைக்கும் பணியை விரைந்து துவங்கி முடிக்க வேண்டும்.

வாவூர் நசீர் அஹமத்: என்னுடைய வார்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரியா அன்பு: என்னுடைய வார்டில் கால்வாய், சாலை பணிகள் மிகவும் காலதாமதமாக நடை பெறுகிறது. அதனை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்செல்வி: ஸ்ரீராமபுரம் பகுதியில் குடிநீர் பைப்லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈமச்சடங்கு உதவித் தொகை விரைந்து வழங்க வேண்டும்.

இம்தியாஸ் அஹமத்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காவில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. அதனை சீரமைத்து தர வேண்டும்.

கார்த்திகேயன் : ஆம்பூர் எஸ்.கே. ரோடு பகுதியில் சாலை அமைக்கும் பணி காலதாமதாக நடைபெறுகிறது. விரைந்து மேற்கொள்ள வேண்டும். கிருஷ் ணாபுரம் மயானத்துக்கு மழை காலங்களில் செல்ல முடியாத நிலையில் சாலை உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும்.

என்.எஸ்.ரமேஷ்: வரி வசூல் செய்யும் பொழுது பொது மக்களுக்கு வரி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். வரி செலுத்தாதவர்களின் கடையை உடனடியாக பூட்டி சீல் வைக்காமல் அவர்களுக்கு உரிய அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி அதன்பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமால் பாஷா : நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT