கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயில் மற்றும் பூச்சித் தாக்கு தலால் மா மரங்களில் காய் பிடிக்கும் திறன் குறைந்து வருகிறது. இதனால், மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப் படுகிறது. போச்சம்பள்ளி, சந்தூர், காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சுவை அதிகம்: இங்கு சுவை மிகுந்த அல்போன்ஸா, தோதாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் 4 முதல் 5 லட்சம் மெட்ரிக் டன் வரை மா மகசூல் கிடைக்கிறது.
கடந்த ஆண்டு பெய்த மழை யால், மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்திருந்தன. இதனால், வழக்கத்தைவிட மகசூல் அதி கரிக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது.
வெதும்பி உதிரும் நிலை: இந்நிலையில், கோடைக்கு முன்னரே வெயில் தாக்கம் மற்றும் பூச்சித் தாக்குதலால் மரங்களில் காய் பிடிக்கும் திறன் குறைந்துள்ளது. மேலும், மாம்பிஞ்சுகள் வெதும்பி உதிர்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மா விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சவுந்தரராஜன், சிவகுரு ஆகியோர் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக 25 ஆயிரம் ஹெக்டேருக்கு மா மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் மாமரங்களில் பூக்கள் பூத்திருந்ததால் 7 லட்சம் மெட்ரிக் டன் மா மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.
பூவும்..காயும்... ஆனால், மாமரங்களில் பூச்சித் தாக்குதல், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மாம்பிஞ்சுகள் வெதும்பி உதிர்ந்து வருகின்றன. இதேபோல, பூத்திருக்கும் கொத்துகளில் குறைந்தது 5 காய்கள் வரை பிடிக்கும். தற்போது, ஓரிரு காய்கள் பிடிக்கும் நிலை தான் உள்ளது.
சில மரங்களில் பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து குச்சி மட்டும் தான் உள்ளது. மேலும், மரத்தில் வழக்கத்தை விடப் பிப்ரவரி இறுதியில் அதிகளவில் பூக்கள் பூத்தன. ஏற்கெனவே சில மரங்களில் டிசம் பரில் பூத்த கொத்துகளில் காய்களும், மறுபுறம் பூக்களுமாக உள்ளன.
இதனால், பூக்களிலிருந்து வெளியேறும் திரவம், காய்கள் மீது படர்ந்து கருப்பு நிறப் புள்ளிகள் ஆங்காங்கே தென்பட வாய்ப்பு உள்ளது. பூச்சிகளும் தாக்கும் நிலையுள்ளது. வழக்கமாக மாமரங்களுக்கு 3 முறை மருந்துகள் தெளிக்கப்படும் நிலையில், நிகழாண்டில் 5 முறை தெளித் துள்ளோம்.
இருப்பினும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை மூலம் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.