தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் 96 விமானங்கள் ரத்து

செய்திப்பிரிவு

சென்னை: இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானங்​களின் சேவை​யில் ஏற்​பட்​டுள்ள பிரச்​சினை காரண​மாக, சென்னை விமான நிலை​யத்​தில் 6-வது நாளாக விமான சேவை பாதிக்​கப்​பட்​டது. நேற்று மட்​டும் வரு​கை, புறப்​பாடு என 96 விமானங்கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் பயணி​கள் பெரும் அவதிக்​குள்​ளாகினர்.

இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமான நிறு​வனத்​தின் சேவை சீராக இன்​னும் சில தினங்​கள் ஆகும் என்​ப​தால், சென்னை விமான நிலை​யத்​திலிருந்து இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானத்​தில் பயணம் செய்​வதற்​காக முன்​ப​திவு செய்​திருந்த பயணி​கள் பெரும்​பாலானோர், தங்​கள் டிக்​கெட்​களை ரத்து செய்​து, வேறு விமானங்​களில் டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்​யத் தொடங்​கி​யுள்​ளனர்.

பயணி​களின் டிக்​கெட்​களை ரத்து செய்​யும்​போது, அந்த பணம் அவர்​களு​டைய வங்​கிக் கணக்​குக்கு வந்​து​விடும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், வங்​கிக் கணக்​கில் பணம் வர தாமதம் ஆவதாக பயணி​கள் தரப்​பில் கூறப்​படு​கிறது.

கட்டண உச்சவரம்பு: மத்​திய விமான போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சகம், உள்​நாட்டு விமானங்​களில் டிக்​கெட்​டு​களுக்​கு, உச்​சவரம்​பாக ஒரு டிக்​கெட்​டுக்கு 500 கி.மீ. வரையி​லான பயண தூரத்​துக்கு அதி​கபட்​சம் ரூ.7,500, ஆயிரம் கி.மீ. ரூ.12 ஆயிரம், 1500 கி.மீ. பயண தூரத்​துக்கு ரூ.15 ஆயிரம், 1500 கி.மீட்​டருக்கு மேல் ரூ.18 ஆயிரம் என உச்​சவரம்பை நிர்​ண​யித்​துள்​ளது.

மத்​திய விமான போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சகம் விதித்​துள்ள உத்​தரவை தனி​யார் விமான நிறு​வனங்கள் முறை​யாக அமல்​படுத்து​வதும் இல்​லை. அந்த நிறு​வனங்​கள் வழக்​கம்​போல் கூடு​தல் கட்​ட​ணங்களை பல்​வேறு காரணங்களைக் கூறி வசூலிப்​பதாக பயணி​கள் குற்​றஞ்​சாட்​டு​கின்​றனர்.

SCROLL FOR NEXT