தமிழகம்

ஆஸ்கர் கிடைக்க காரணமாக இருந்த படைப்பாளர்கள், ரசிகர்களுக்கு வாழ்த்து: தினகரன்

செய்திப்பிரிவு

சென்னை: ஆஸ்கர் விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த படைப்பாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தாயன்புடன் யானைகளை பராமரிக்கும் தமிழ்நாட்டின் முதுமலையை சேர்ந்த தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'The Elephant Whisperers' உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றிருப்பது பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

அதே போல இந்திய மொழிகளில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் ''நாட்டு நாட்டு'' பாடல் ஆஸ்கர் விருது பெற்று சாதனை படைத்திருப்பதும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்கர் விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த படைப்பாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்." என தினகரன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT