கொடைக்கானல்: கொடைக்கானல் மலைச்சாலை யில் விபத்துகளை தடுக்க அமைக் கப்பட்டுள்ள குவி கண்ணாடி, தடுப்பு வேலிகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.கொடைக்கானலுக்கு செல்ல வத்தலகுண்டு மற்றும் பழநி மார்க்கமாக இரு வழிகள் உள்ளன.
இவ்விரு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆபத்து நிறைந்த இந்த மலைச்சாலைகளில் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படு கின்றன.
இதைத் தடுக்க, நெடுஞ்சாலைத் துறை சார்பில் மலைச்சாலையில் குவி கண்ணாடிகள் பொருத்தப் பட்டுள்ளன. தற்போது அந்த கண்ணாடிகள் பல இடங்களில் சேத மடைந்துள்ளன. இதே போல் மலைச்சாலையில் சில இடங்களில் அமைக்கப் பட்டுள்ள தடுப்பு கம்பி வேலிகள் சேதமடைந்து சாலையில் விழுந்து கிடக்கின்றன.
பழநியில் இருந்து கொடைக் கானல் செல்லும் மலைச்சாலையில் அபாயகரமான வளைவுகள் உள்ள சில இடங்களில் தடுப்பு சுவரோ, வேலியோ இல்லை. இதனால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதே சமயம் இரவு நேரத்தில் புதிதாக பயணம் செய்வோர் விபத் தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நெடுஞ் சாலைத்துறையினர் மலைச்சாலை யில் தேவையான இடங்களில் புதிதாக தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். சேதமடைந்த தடுப்பு வேலிகள் மற்றும் குவி கண்ணாடிகளை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.