தமிழகம்

100 பவுன் தங்கம், 7 கிலோ வெள்ளி கொள்ளை: நள்ளிரவில் காரை மறித்து கைவரிசை

செய்திப்பிரிவு

நள்ளிரவில் காரை மறித்து அதில் இருந்தவர்களை கீழே தள்ளி விட்டு 100 பவுன் தங்கம் மற் றும் 7 கிலோ வெள்ளியை காருடன் கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீஸார் தேடிவரு கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள கண்ணா ஜுவல் லர்ஸ் என்ற நகைக் கடையின் உரிமையாளர் பாலசந்தர். இவர் தனது கடைக்கும், சகோதரியின் கணவர் செந்தில்முருகன் என்பவ ரது நகைக்கடைக்கும் மதுரையில் இருந்து 100 பவுன் தங்க நகைகள் மற்றும் 13 கிலோ வெள்ளிப் பொருள்களை வாங்கிக்கொண்டு, தனது அண்ணன் மகாலிங்கம், உறவினர் ஜெயக்குமார் மற்றும் வாகன ஓட்டுநர் குமாருடன் சனிக் கிழமை இரவு கமுதி புறப்பட்டார்.

காரை மறித்த கும்பல்

அபிராமம் அகத்தாரிருப்பு கிராமம் அருகே சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது 5 பேர் கொண்ட கும்பல் காரை திடீரென மறித்துள்ளது. ஓட்டுநர் குமார் காரை நிறுத்தியதும், அவரை மிரட்டி கீழே தள்ளிவிட்டு மற்ற 3 பேருடன் ஐந்து பேர் கொண்ட கும்பல் காரை கடத்திச் சென்றது.

சிறிது தூரம் சென்றபின் பால சந்தர் உள்பட 3 பேரையும் கத்தி முனையில் மிரட்டி கீழே இறக்கி விட்டு, அவர்கள் வைத்திருந்த தங்கம், வெள்ளி நகைகளுடன் காரில் அந்தக் கும்பல் தப்பியது.

விபத்துக்குள்ளான கார்

இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தில் பாலசந்தர் புகார் கொடுத்தார். இதன் அடிப்படை யில், ராமநாதபுரம் மாவட் டம் முழுவதும் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டு, தீவிர வாகனச் சோதனை நடை பெற்றது. இதில் பார்த்திபனூர் அருகே உள்ள தேவனேரி என்ற இடத்தில், கடத்தப்பட்ட நகை வியா பாரியின் கார் விபத்தில் சிக்கி இருந்தது தெரியவந்தது. காரில் இருந்த 100 பவுன் நகைகள், 7 கிலோ வெள்ளிக் கொலுசுகளுடன் அந்தக் கும்பல் தப்பிவிட்டது. காரின் அடிப்பகுதியில் மறைவாக இருந்த 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு ரூ. 30 லட்சம் என அவர்கள் தெரிவித் தனர்.

SCROLL FOR NEXT