தமிழகம்

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கார் பார்க்கிங் 3 மாதங்களுக்கு மூடப்படும்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதனால், இந்த ரயில் நிலையத்தில் உள்ள 4 சக்கர வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளுக்காக வரும் 24-ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது.

இதற்கு மாற்று ஏற்பாடாக பயணிகள் தங்களது 4 சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே சமயம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் வழக்கம் போல தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT