அமைச்சர் ரகுபதி | கோப்புப் படம் 
தமிழகம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை மீண்டும் இயற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்: அமைச்சர் ரகுபதி

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை மீண்டும் இயற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட 8 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ”ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்ற சட்டமன்றத்திற்கு உரிமை உள்ளதாக நீதிமன்றம் கூறி உள்ளது. பழைய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து புதிய சட்டம் இயற்றலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இதற்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் எப்படி திருப்பி அனுப்பி இருக்கிறார் என்று தெரியவில்லை.

இது தொடர்பான கோப்புகளை படித்து விட்டு தெளிவான பதிலை முதல்வர் அளிப்பார். இப்போது தான் ஆளுநர் முதல் முறையாக திரும்பி அனுப்பி உள்ளார். இதற்கு முன்னதாக சில கேள்விகள் கேட்டார். அதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. 2வது முறை சட்டத்தை நிறைவேற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மறுப்பு தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு இல்லை." இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT