விலகல் கடிதம் 
தமிழகம்

சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவு நிர்வாகிகள் பாஜகவில் இருந்து கூண்டோடு விலகல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகி உள்ளனர்.

தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணனும், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், பாஜகவின், சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பு பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவைச் சேர்ந்தவர்கள் கூண்டோடு பாஜவில் இருந்து தற்போது விலகி உள்ளனர். இதன்படி மாவட்ட தலைவர் அன்பரசு, மாவட்ட துணைத் தலைவர்கள் சரவணன் மற்றும் ஸ்ரீராம் உள்ளிட்ட 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி உள்ளனர்.

SCROLL FOR NEXT