தமிழகம்

சாலைகளை மாநகராட்சி சீரமைக்காதது ஏன்? - பாஜக மாநில துணைத் தலைவர் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: மழைநீர் வடிகால் பணி முடிவடைந்தும் சாலைகளை சீரமைக்காதது ஏன் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: சென்னையில் மழைநீர் வடிகால்வாய் பணி முடிந்து பல மாதங்களாகிவிட்டன. அந்த பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் இன்றுவரை சீரமைக்கப்படவில்லை. பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாகவே உள்ளன.

சிங்கார சென்னை என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசு, மாதங்கள் பல ஆகியும் அலங்கோல சென்னையாகவே தொடர்ந்து நீடிப்பதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

மழைநீர் வடிகால்வாய் பணி முடிந்து குழிகளை அடைத்த சில நாட்களிலேயே மின் துறை, கழிவுநீர் பணி என மீண்டும் மீண்டும் சாலைகள் தோண்டப்படுகின்றன. சொத்து வரி, தொழில் வரி என எல்லா வரிகளையும் உயர்த்தி வருவாய் ஈட்டும் மாநகராட்சியின் அனைத்து தெருக்களும் அலங்கோலமாக இருப்பது ஏன்? அனைத்து சாலைகளையும் மாநகராட்சி உடனே சீரமைக்க வேண்டும்.

SCROLL FOR NEXT