தமிழகம்

அரசாணை, வழிகாட்டுமுறைகள் உட்பட நிலம் கையகப்படுத்தல் தொடர்பான 4 தொகுப்புகள்: தலைமைச் செயலர் வெளியிட்டார்

செய்திப்பிரிவு

சென்னை: நிலம் கையகப்படுத்தல் தொடர்பான 4 தொகுப்புகளை தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிலஎடுப்பு பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துவருவாய்த்துறை களப் பணியாளர்களுக்கு அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி வாயிலாக நிலஎடுப்பு தொடர்பான பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இழப்பீடு தொகை: இதையடுத்து, மாநில நில எடுப்பு சட்டங்கள், மத்திய நில எடுப்பு சட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் மற்றும் தனிநபர் பேச்சுவார்த்தை முறை ஆகியவற்றின் கீழ் நிலஎடுப்பு நடைமுறைகளின் உயர் இழப்பீட்டுத் தொகை கோரும் மனுக்களை கையாள்வது குறித்த நடைமுறைகளையும் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக இதுவரை நடைமுறையில் இருந்து வரும் அனைத்து சட்டங்கள், விதிகள், அரசாணைகள், அரசுவழிகாட்டுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 4 தொகுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்புகளை சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் நேற்றுநடைபெற்ற விழாவில் தமிழகஅரசின் தலைமைச் செயலரும், பயிற்சித் துறையின் தலைவருமான வெ.இறையன்பு வெளியிட்டார்.

அவற்றின் முதல் பிரதிகளைவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர்குமார் ஜெயந்த் பெற்றுக்கொண்டார். அப்போது மனிதவள மேலாண்மைத்துறை செயலர் மைதிலி ராஜேந்திரன், நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி கூடுதல் இயக்குநர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இ ருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

SCROLL FOR NEXT