தேமுதிக அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் மட்டுமே ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமையகம் அறிவித்துள்ளது.
தேமுதிகவின் சார்பில் நாளை (ஞாயிறு) சென்சென்னை, மேற்கு சென்னை மாவட்டங்களிலும், திங்கள்கிழமை வடசென்னை, மத்திய சென்னை மாவட்டங்களிலும் செவ்வாய் கிழமை திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்டங்களிலும் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதில் கலந்து கொண்டு தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் போது கட்சியின் தலைமைக் கழகம் வழங்கியுள்ள உறுப் பினர் அட்டையையும், மாவட்டக்கழகத்தின் மூலம் வழங்கப் பட்டுள்ள அனுமதி அட்டையையும் கொண்டு வரவேண்டும். இந்த அட்டைகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு தேமுதிக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.