விழா நடந்த இடத்துக்கு நடந்து சென்ற மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன். 
தமிழகம்

கீழடி வெளிச்சத்துக்கு வரக் காரணமான தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் போலீஸாரால் அவமதிக்கப்பட்டாரா?

செய்திப்பிரிவு

மதுரை: சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்னண். கீழடி அகழாய்வு பெரியளவில் பேசப்படுவதற்கு இவரும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் 2 கட்ட ஆய்வுக்கு இவரது முயற்சி பெரும் பங்கு வகித்தது. தற்போது, அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய தொல்லியல் துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்.

இந்நிலையில், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி வைக்க, அதே பகுதியில் அகழ் வைப்பகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இவ்விழாவில் அவர் முதல்வரால் கவுரவிக்கப்பட்டார். இதற்காக அமர்நாத் ராமகிருஷ்ணன், முதல்வர் வருவதற்கு முன்பாகவே தனது கார் மூலம் கீழடி பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.

மதுரை - ராமநாதபுரம் மெயின் ரோட்டில் இருந்து கீழடிக்கு பிரியும் ்சாலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். தன்னைப் பற்றி விளக்கம் அளித்தும் போலீஸார் தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வேறு வழியின்றி காரை பிரதான சாலைப் பகுதியில் நிறுத்தி விட்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றார்.

இது கீழடி அகழாய்வை முதன் முதலில் உலகறியச் செய்த தொல்லியல் ஆய்வறிஞரை அவமதித்த செயல் என தொல்லியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT