வைகோ | கோப்புப்படம் 
தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி முன்பே எதிர்பார்த்ததுதான்: வைகோ

செய்திப்பிரிவு

சென்னை: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இருபது மாதகால நல்லாட்சி புகழ் மகுடத்தில் ஒளி வீசும் வைரமாக ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி அமைந்திருக்கிறது.வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தந்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் களம் கண்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மாபெரும் வெற்றி பெற்று இருப்பது முன்பே எதிர்ப்பார்த்ததுதான். அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலினின் இருபது மாதகால நல்லாட்சி புகழ் மகுடத்தில் ஒளி வீசும் வைரமாக ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி அமைந்திருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தந்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பெரு வெற்றிக்கு உழைத்திட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் மதிமுக சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT