அதிமுக வேட்பாளர் தென்னரசு | கோப்புப் படம் 
தமிழகம்

வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய அதிமுக வேட்பாளர்: பணநாயகம் வென்றதாக பேட்டி

செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஜனநாயகத்திற்குப் பதிலாக, பணநாயகம் வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் தென்னரசு விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இந் நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகத்திற்கு பதிலாக, பணநாயகம் வெற்றி பெற்று விட்டது என்று தெரிவித்துவிட்டு காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றார்,

SCROLL FOR NEXT