ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லட்டு வழங்கிய தொண்டர்கள் 
தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் முன்னிலை - ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லட்டு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

ஈரோடு / சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், அவருக்கு லட்டு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னலையில் உள்ளார். 2வது சுற்று முடிவில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டில், அவருக்கு லட்டு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT