தமிழகம்

பிரதமர் மோடியின் இளைய சகோதரருக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

செய்திப்பிரிவு

சென்னை: உடல்நல குறைவு காரணமாக பிரதமர் நரேந்திரமோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பெற்றார்.

பிரகலாத் தாமோதரதாஸ் மோடி (69), கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமேசுவரம், மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் தமிழகம் வந்துள்ளார்.

சென்னையில் தங்கியிருந்த அவருக்கு நேற்று காலை லேசான சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ளஅப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் குழு பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை அளித்தனர்.

சில மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர், மாலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

SCROLL FOR NEXT