ஆர்.பி.உதயகுமார் மகள் வரவேற்பு விழாவில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள். 
தமிழகம்

ஆர்.பி.உதயகுமார் மகள் திருமண வரவேற்பு விழா: ஈரோடு தேர்தலால் வராத முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

மதுரை: திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மகள் பிரியதர்ஷினி- முரளி உள்ளிட்ட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமண விழா பிப்.23-ம் தேதி நடந்தது.

அதிமுக ஜெ. பேரவை சார்பில் இடைக்கால பொதுச் செயலாளர் கே.பழனிசாமி திருமணத்தை நடத்தி வைத்தார். இத்திருமண விழாவின் போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்ததால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஏராள மானோர் வரவில்லை. இந்நிலையில், திருமண வரவேற்பு விழா டி.குன்னத்தூரில் நேற்று நடந்தது.

வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, ஆனந்தன், கோகுலஇந்திரா, டாக்டர் சரோஜா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

SCROLL FOR NEXT