மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் `கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தில், மதுரையில் மார்ச் 5, 6 ஆகிய நாட்களில் மண்டல ஆய்வு சுற்றுப் பயணத்தில் பங்கேற்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், `கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி முக்கிய அமைச்சர்கள், அரசுத்துறை செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மதுரை மண்டலத்தில் மார்ச் 5, 6-ம் தேதிகளில் ஆய்வு நடத்துகிறார். இது குறித்து அரசு அலுவலர்கள் கூறியதாவது: ‘முதல் ஆய்வில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்டங்கள் இடம் பெறுகின்றன. மார்ச் 5-ம் தேதி காவல் துறையினர் பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார்.
இக்கூ ட்டம் உலக தமிழ்ச்சங்கக் கட்டிடத்தில் நடக்கிறது. இதில் தென் மண் டல ஐஜி, டிஐஜிக்கள், 5 மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட உயர் அதி காரிகள் பங்கேற்கின்றனர். மார்ச் 6-ம் தேதி அனைத்துத் துறை அலுவலர்களுடன் அரசுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். வட்டாட்சியர் அலுவலகத்திலும் நேரில் ஆய்வு செய்கிறார்.
ஆன்லைன் சான்றிதழ் வழங்கல் தொடர்பாக ஆய்வு நடத்துகிறார். இதற்கான புள்ளி விவரங்களைத் தயாரித்து வருகிறோம். திட்டப் பணி குறித்து நேரடிக்கள ஆய்விலும் ஈடுபடுகிறார் என்றனர். முதல்வர் வருகையின் போது அகரத்தில் உள்ள கீழடி அகழ்வைப் பகத்தையும் திறந்து வைக்கிறார். இதையொட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.