தமிழகம்

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த தேமுதிக நிர்வாகி கைது: 3 குண்டுகள், 2 செல்போன் உள்ளிட்டவை பறிமுதல்

செய்திப்பிரிவு

மதுரையை அடுத்த மேலூரில் அனுமதியின்றி துப்பாக்கி வைத் திருந்ததாக தேமுதிக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி, 3 குண் டுகள், 2 செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை மாவட்டம், திருவாதவூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்பாண்டி. தற்போது மதுரை வண்டியூரில் வசித்து வருகிற, தேமுதிக மதுரை வடக்கு மாவட்ட துணைச் செய லரான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா விற்பனை தொடர்பாக வண்டியூரில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கைதாகி, அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை மேலூர் பஸ் நிலையம் அருகே கரிமேட்டைச் சேர்ந்த தனது ராஜ்குமார் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த வழியாக ரோந்து சென்ற மேலூர் எஸ்.ஐ. பழனியப்பன் மற்றும் போலீஸார் சந்தேகத்தின்பேரில் இருவரையும் விசாரித்தபோது, போலீஸாரைத் தாக்கிவிட்டு இருவரும் தப்பி யோட முயன்றுள்ளனர். அவர் களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, செந்தில்பாண்டி யிடம் 3 குண்டுகளுடன் கூடிய நாட்டுத்துப்பாக்கி (பிஸ்டல் ரகம்) இருந்தது.

இதுபற்றி எஸ்.ஐ பழனியப்பன் அளித்த புகாரின்பேரில், அனுமதி யின்றி துப்பாக்கி வைத்திருந்தது, கொலை செய்ய முயற்சித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் மேலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, செந்தில்பாண்டி, ராஜ்குமார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து துப்பாக்கி, 3 குண்டுகள், 2 செல்போன், 2 ஏடிஎம் கார்டுகள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT