சென்னை: நீதிமன்றங்களால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக டிஜிபிக்கு அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியுள்ளார்.
நீதிமன்றம் கவலை: அவர் டிஜிபி-க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பிடிவாரன்ட் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவை கவலை தெரிவித்துள்ளன.
நிலுவையில் உள்ள, ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட்டுகளை முறையாக நிறைவேற் றுவதில் காவல் துறை முறையாகச் செயல்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் தெரிவித் துள்ளார்.
மேலும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரன்ட்கள் எத்தனை நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத் துறைக்கு நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் மற்றும் கூடுதல் அமர்வு நீதிபதிகள், உதவி அமர்வு நீதிபதிகள், சிறப்பு அமர்வு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர், அந்தந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வாரன்ட்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜன. 6-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, மேற்கு மண்டல ஐ.ஜி. மட்டும் தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட் டவர்கள் மற்றும் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
விரைந்து வழங்க வேண்டும்: இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ள வாரன்ட் குறித்த விரிவான அறிக் கையை விரைந்து வழங்க வேண்டும்.
குறிப்பாக, வாரன்ட் பிறப்பிக் கப்பட்ட நபர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வாரன்ட் உத்தரவுகளை நிறை வேற்றும்படி அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர்கள் உள்ளிட் டோருக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.