மீனம்பாக்கம் ரயில் நிலையம் | கோப்புப் படம் 
தமிழகம்

மீனம்பாக்கம் ரயில் நிலைய நடைபாதை அருகே பயணச்சீட்டு மையம்: தெற்கு ரயில்வே பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மீனம்பாக்கம் ரயில் நிலைய நடைபாதை அருகே நிரந்தரப் பயணச்சீட்டு கவுன்ட்டர் அமைக்கக் கோரிய வழக்கில் தெற்கு ரயில்வே பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்களில் பயணம் செய்ய, முதல் மாடியில் உள்ள கவுன்ட்டரில் பயணச்சீட்டு பெற வேண்டியுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி, மாணவர்கள் பயணச்சீட்டை பெற்று, கீழே வந்து ரயில் பயணம் செய்ய சிரமத்தை சந்திப்பதால், நடைபாதை அருகே பயணச்சீட்டு கவுன்ட்டர் அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

SCROLL FOR NEXT