இபிஎஸ் மற்றும் தமிழ்மகன் உசேன் 
தமிழகம்

இபிஎஸ் தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர்: அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி

செய்திப்பிரிவு

சென்னை: இபிஎஸ் தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார்.

சென்னை, ராயபபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த தீர்ப்பு மகத்தான, வெற்றிகரமான தீர்ப்பு. இந்த இயக்கம் உழைப்பவர்கள் கையில் தான் இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பு ஓர் எடுத்துக்காட்டு. அதிமுக ஒருங்கிணைந்து தான் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உள்ளது. 99 சதவீத நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் உள்ளனர். இபிஎஸ்.தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். விரைவில் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக தலைமைக் கழகம் முடிவு செய்யும்." என்று கூறினார்.

SCROLL FOR NEXT