அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணைகளைப் பின்பற்றி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு பத்திரப்பதிவு செய்யலாம் என அனுமதித்துள்ள உயர் நீதிமன்றம், இதன் மூலம் ஏற் கெனவே விதித்த தடையை தளர்த்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் விவசாய விளை நிலங்களை அங்கீகாரமற்ற வீட்டு மனைகளாக மாற்றுவதை தடை செய்யக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, கடந்த 9.9.16 அன்று தமி ழகம் முழுவதும் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது.
இதனால் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் முடங் கியதால் இந்த தடையை நீக்க வலியுறுத்தி ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் மனுக் களை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் தலைமை யிலான அமர்வு கடந்த மார்ச் 28-ம் தேதி, இது தொடர்பாக தமிழக அரசு பத்திரப்பதிவு சட்டம் பிரிவு 22 ஏ-வில் கொண்டு வந்த சட்டத் திருத்தங்களை ஏற்று 2016 அக் டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பதியப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மட்டும் மறு பத் திரப்பதிவு செய்ய அனுமதித்து, தடையை தளர்த்தி உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 21-ம் தேதி விசாரித்த தற்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்து வது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிகளை உருவாக்கி நட வடிக்கை எடுக்கும் வரை, பத்திரப் பதிவு செய்யக்கூடாது” என மீண் டும் தடை விதித்து வழக்கை மே 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரையறை செய்வது தொடர்பாகவும், இனிவரும் காலங்களில் வீடு கட்டும்போது கட்டாயம் கடைபிடிக்க வேண் டிய புதிய விதிமுறைகள் குறித்தும் தமிழக அரசு 2 அரசாணைகளை வெளியிட்டது. இந்த அரசாணைகள் கடந்த மே 5-ம் தேதி உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் ஒருநாள் முழுவதும் நடந்தது.
தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அய்யாத் துரை, மனுதாரர்களான வழக் கறிஞர்கள் யானை ராஜேந்திரன், வி.பி.ஆர்.மேனன் மற்றும் ரியல் எஸ்டேட் தரப்பில் வழக்கறிஞர்கள் டி.வி.ராமானுஜம், நளினி சிதம் பரம், திருமலை, ஆறுமுகம் நயினார் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், ‘‘உயர் நீதிமன்ற தடையால் மாணவர் களின் உயர் கல்வி, பிள்ளை களின் திருமணம் போன்ற அத்தி யாவசிய செலவுகளுக்கு பொது மக்கள் பணமின்றி தவிப்பதாக முறையிடப்பட்டது. அதைக் கருத்தில் கொண்டு அங்கீகார மற்ற வீட்டு மனைகளை வரை யறை செய்வது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள 2 அரசாணை களைப் பின்பற்றியும், பத்திரப் பதிவு சட்டம் பிரிவு 22 ஏ-வில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பின்பற்றியும் பத்திரப்பதிவு செய்யலாம் என தடை தளர்த்தப்படுகிறது.
ஆனால், புதிய அரசாணையில் உள்ள ‘‘20.10.16-க்கு முன்பாக பதியப்பட்ட அல்லது விற்கப்பட்ட அங்கீகாரமற்ற மனையிடங் களுக்கு தமிழ்நாடு நகரமைப்புச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப் படுகிறது’’ என்பதை ஏற்க முடி யாது. ஏனெனில் கடந்த செப்டம் பர் 9-ம் தேதி தடை விதிக்கப் பட்டபோது வரையறை செய் வதற்கு எந்தவொரு விதிகளும் உருவாக்கப்படவில்லை. ஆனால் தற்போது புதிய விதிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது.
மேலும் தற்போது பத்திரப் பதி வுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அனுமதி இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்கிற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது.
அத்துடன் ஏற்கெனவே பத்திரப் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்ட 9.9.2016-ம் தேதியில் இருந்து அந்த தடை உத்தரவு தளர்த்தப் பட்ட 28.03.17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 9 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பத்திரப் பதிவு கள் சட்ட விரோதமாக நடந்துள் ளன. அவை செல்லாது. உயர் நீதி மன்ற உத்தரவை மீறி மேற் கொள்ளப்பட்ட அந்த பத்திரப் பதிவுகள் குறித்து தமிழக அரசு முறையாக விசாரித்து நட வடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல ஏப்ரல் 21-ம் தேதியில் இருந்து மே 12-ம் தேதி வரை ஏதேனும் பத்திரப் பதிவுகள் நடந்து இருந்தால் அவையும் சட்ட விரோதமானது’’ எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் ஜூன் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.