தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் அருப்புக்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் 199 பள்ளிகளில் பயின்ற 25196 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 24654 பேர் தேர்ச்சி பெற்றனர்.
விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதம் 97.85%.