தமிழகம்

நடேசன் பூங்கா மெட்ரோ ரயில் நிலைய திட்டம் கைவிடப்பட்டது

செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் தியாகராயநகர் நடேசன் பூங்கா மெட்ரோரயில் நிலையம் அமைப்பது கைவிடப்படுவதாக மெட்ரோரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் சென்னை தியாகராயநகர் பனகல் பூங்கா,நடேசன் பூங்கா, நந்தனம்ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில்,நடேசன் பூங்காவில் மெட்ரோரயில்நிலை யம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "நந்தனம் ரயில்நிலையத்தில் இருந்து நடேசன் பூங்கா ரயில் நிலையம் 625 மீ.தொலைவிலேயே உள்ளது. மறுபுறம், பனகல் பார்க் ரயில்நிலையம் 623 மீட்டர் தூரத்தில் உள்ளது. 700 மீட்டர் தொலைவுக்கும் குறைவான தூரமாக இருப்பதால் நடேசன் பூங்கா ரயில்நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது" என்றனர்.

SCROLL FOR NEXT