பழநி முருகன் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளிப் பொருட்கள் 
தமிழகம்

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7.17 கோடி

செய்திப்பிரிவு

பழநி: பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.7.17 கோடி கிடைத்துள்ளது.

பழநி தண்டாயுதாணி சுவாமி கோயிலில் மாதம் ஒரு முறையும், திருவிழாக் காலங்களில் இரு முறையும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி, கடந்த 3 நாட்களாக கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் காணிக்கையாக ரூ.7 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 126, தங்கம் 1,248 கிராம், வெள்ளி 48,277 கிராம் மற்றும் 2,529 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளன. வழக்கமாக மாதந்தோறும் நடக்கும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை காணிக்கையாக கிடைக்கும்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த தைப்பூசத் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் செலுத்திய காணிக்கையால் இம்மாதம் கூடுதலாக ரூ.4 கோடி வரை கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT