தமிழகம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை இளைஞரின் இதயம் சென்னை சிறுவனுக்கு பொருத்தம்

செய்திப்பிரிவு

கோயம்புத்தூரில் மூளைச்சாவு அடைந்த பொறியாளரின் இதயம் விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டு பள்ளி சிறுவனுக்கு பொருத்தப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காட் டைச் சேர்ந்தவர் சங்கரநாராய ணன். இவரது மகன் நவநீத் (22), பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 15-ம் தேதி பெங்க ளூருவில் இருந்து பாலக்காட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட் டார். தருமபுரி அருகே சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் இவரது தலையில் பலத்த காயமடைந்தார். கோயம்புத்தூர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

அதன்படி டாக்டர்கள் குழுவி னர் அறுவை சிகிச்சை செய்து நவநீத் உடலில் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்களை எடுத்தனர். கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கேஎம்சிஎச் மருத்துவமனையில் உடல் உறுப்பு களுக்காக பதிவு செய்து சிகிச்சைப் பெற்று வந்த 3 பேருக்கு பொருத் தப்பட்டன. கோயம்புத்தூரில் உள்ள அரவிந்த் மருத்துவ மனைக்கு கண்கள் கொடுக்கப்பட் டன. அவர்கள் தேவையான 2 பேருக்கு கண்களை பொருத்தினர்.

நவநீத் இதயத்தை சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சென்னை யைச் சேர்ந்த 16 வயது பள்ளி சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஃபோர் டிஸ் மலர் மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் குழுவினர் விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றனர். இதயத்தை பெற்றுக் கொண்டு நேற்று காலை 10.30 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து விமானத்தில் புறப்பட்ட னர். சென்னைக்கு பகல் 11.10 மணிக்கு விமானம் வந்தடைந்தது. விமான நிலையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் இதயத்துடன் டாக்டர்கள் குழுவினர் பகல் 11.18 மணிக்கு புறப்பட்டு, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு பகல் 11.30 மணிக்கு வந்தனர்.

மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் குழுவினர் தானமாக கிடைத்த இதயத்தை பள்ளி சிறுவனுக்கு வெற்றிகரமாக பொருத்தினர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு 12 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் விரைவாக செல்வதற்கு தேவை யான அனைத்து ஏற்பாடுகளை போக்குவரத்துத்துறை போலீஸார் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT