தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பாஜக முயற்சி செய்யவில்லை என்று, மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஈரோடு கோட்டம் பாஜக மண்டலத் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்காக, நேற்று திருப்பூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டணி குறித்து நாங்கள் யாரிடமும் பேசவில்லை. அதற் கான முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. கட்சியைப் பலப்படுத்தும் பணியில் மட்டுமே பாஜக ஈடுபட்டுள்ளது.
அரசு நிர்வாகம் சீர் அடைய வேண்டும். ஊழலற்ற, செயலாற் றக்கூடிய நிர்வாகமாக இருக்க வேண்டும். எதிர்கட்சி அந்தஸ்தை திமுக முற்றிலும் இழந்துவிட்டது. குளங்களை ஆக்கிரமித்தவர்களே திமுகவினர் தான். பாவ மன்னிப்பு கேட்பது போல், இன்றைக்கு குளங்களை தூர்வாரி வருகிறார்கள்.
கறுப்புப் பணம், லஞ்சம் புரையோடியதற்கு ப.சிதம்பரம் போன்றவர்கள்தான் காரணம். ஜிஎஸ்டி வரி விதிப்பால் அத்தியா வசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டர் பக்கத்தில் கூட்டணி குறித்து பதிவிட்டுள்ளது, அவரது தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து தமிழக பாஜக எந்தவித முயற்சியிலும் ஈடுபடவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஸ்டாலின், திருமாவளவன் பதற்றப்படுகிறார்கள்.
சொட்டுநீர் பாசனத்துக்காக, தமிழக அரசுக்கு கடந்த 3 ஆண்டு களில் ரூ.200 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், அத்திட்டம் மூலமாக வறட்சியை சமாளிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசின் ஒத்துழைப் போடு செயல்பட்டால், தமிழக மக்களுக்கு நல்லது கிடைக்கும். திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் சம்பவத்தில், பெண்ணை தாக்கிய ஏடிஎஸ்பி மீது உரிய நடவடிக்கை எடுக்க மீண்டும் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.