கோப்புப்படம் 
தமிழகம்

சேலம் காவல் ஆணையர் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா ஆவடி காவல் ஆணையரகத்துக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரி, சேலம் மாவட்ட காவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.

சேலம் மாவட்ட காவல் ஆணையராக இருந்துவரும் ஐபிஎஸ் அதிகாரி நஜ்மல் ஹோடா ஆவடி காவல் ஆணையரகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுகிறார்.

சென்னை ரயில்வே காவல் துறை டிஐஜியாக இருந்துவரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஆவடி காவல் சரக இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT