தமிழகம்

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: மே 15 முதல் வேலைநிறுத்த போராட்டம் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

போக்குவரத்துத்துறை அமைச் சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள் ளது. இதனால், ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித் துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற் றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்குதல், போக்குவரத்து இழப்பை அரசே ஏற்றல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து 4-வது கட்ட பேச்சுவார்த்தை பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்தது.

இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை செயலர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் வீ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தொழிற்சங்கங்கள் தரப்பில் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், தொமுச பொருளாளர் கி.நடராஜன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமணன் உட்பட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். காலை 10.40 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மதியம் 12 மணி வரையில் நடந்தது.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:

போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்கங் களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. போக்குவரத்து ஊழியர் களுக்கு முதல்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிதி போதாது என தொழிற்சங்கங்கள் அறிவித்ததால், இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, தற்போது, ரூ.250 கோடி கூடுதலாக சேர்த்து ரூ.750 கோடி ஒதுக்கப்படும். பின்னர், படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். எனவே, இந்த கோரிக்கையை ஏற்று, தொழிற்சங்கங்கள் வரும் 15-ம் தேதி அறிவித்துள்ள காலவரை யற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத் தினோம். 2 ஆயிரம் புதிய அரசு பேருந்துகள் வாங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஏற்கெனவே அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ரூ.500 கோடி ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தார். இன்று (நேற்று) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ரூ.250 கோடி கூடுதலாக சேர்த்து ரூ.750 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி போதாது, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். போக்குவரத்துத் துறை யில் வரவு செலவுக்கு இடையே உள்ள தொகையை அரசு வழங்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த சுமார் ரூ.4 ஆயிரத்து 500 கோடியை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவையான ரூ.ஆயிரத்து 700 கோடி, பணியில் உள்ள தொழிலாளர்களின் நிலுவையான ரூ.300 கோடி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். எனவே, உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். இதுதவிர, 13-வது புதிய ஊதிய ஒப்பந்தத்தில் 50 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள இந்த நிதி போதாது.

எனவே ஏற்கெனவே அறிவித்த படி, வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். தேனாம்பேட்டையில் நாளை (மே 12) நடக்கவுள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT