தமிழகம்

காசோலை, வரைவோலை வாங்க மறுப்பு: கல்விக் கட்டணத்தை பணமாக செலுத்த நிர்பந்தம் - தனியார் பள்ளிகள் மீது பெற்றோர் புகார்

செய்திப்பிரிவு

கல்விக் கட்டணத்தை செக், டிடி-யாக செலுத்தக் கூடாது. ரொக்கமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் நிர்பந்திப்பதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமான கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதை ஒழுங்குபடுத்தும் வகையில் தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் பாடவாரியாக குறிப்பிட்ட கல்விக் கட்டணத்தை இந்தக் குழு நிர்ணயித்து அரசுக்குப் பரிந்துரை செய்கிறது. அதன்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை ரொக்கம், காசோலை (செக்), கேட்பு வரைவோலை (டிடி) என பெற்றோர் தங்கள் விருப்பப்படி செலுத்தலாம்.

ஆனால், ஒருசில தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை செக், டிடி-யாக வாங்க மறுப்பதாகவும், ரொக்கமாக மட்டுமே செலுத்த வேண்டும் என நிர்பந்திப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. செக், டிடி-யாக செலுத்தினால் அந்த தொகை, கணக்கு வரம்புக்குள் வந்துவிடும். முழு தொகைக்கும் ரசீது கொடுக்கவேண்டிவரும். அதேநேரம், ரொக்கமாக வசூலித் தால் கணக்கில் காட்டாமல் இருக் கலாம். குறைவான தொகைக்கு ரசீது கொடுத்தால் போதும். இதனாலேயே பணமாகச் செலுத்து மாறு பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துகின்றன என்கின் றனர் பெற்றோர்.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமியிடம் கேட்டபோது, ‘‘கட்டணத்தை ரொக் கமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. பெற்றோர் செலுத்தும் கல்விக் கட்டணத் தொகைக்கு உரிய ரசீது கொடுக்கப்பட வேண்டும். கல்விக் கட்டண விஷயத்தில் ஏதேனும் குறைகள், பிரச்சினைகள் இருந் தால் அந்தந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அல்லது மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் புகார் செய்யலாம். உரிய நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மாணவர்களை வெளியேற்றுவதா?

இதற்கிடையே, ஒருசில தனியார் சுயநிதி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்புக்கு இடம் மறுக்கப்படுவதாகவும், அவர்களை வேறு பள்ளியில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்து வதாகவும் ஒருசில பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கூடுமானவரை, ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து அதே பள்ளியிலேயே படிப்பைத் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட பாடப் பிரிவில் சேர பல மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கும்போது, அனைவருக்கும் அதில் இடம் வழங்க இயலாது. அதுபோன்ற சூழலில் வேறு பாடப்பிரிவில் சேருமாறு அறிவுறுத்த லாம். மற்றபடி, மதிப்பெண் குறைவாக எடுத்ததற்காக, அவர் களை வேறு பள்ளியில் சேரு மாறு கட்டாயப்படுத்தக்கூடாது” என்றார்.

SCROLL FOR NEXT