தமிழகம்

‘கொலை’ நகரமாகும் மதுரை: போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மதுரையில் அடுத்தடுத்து நடந்து வரும் கொலைச் சம்பவங்களால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு நகரில் கொலை சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை நகர் காவல்துறை சட்டம், ஒழுங்கு துணை ஆணையராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருண் சக்திகுமார் நியமிக்கப்பட்டார். அப்போது, நகரில் கொலை, கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுத்தார். ‘ஓராண்டுக்கு எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன்’ என்ற உத்தரவாதத்துடன் பழைய குற்றவாளிகளிடம் பிணைய பத்திரம் எழுதி வாங்குமாறு போலீஸாரை அறிவுறுத்தினார். அதன்படி 50-க்கும் மேற்பட்டோரிடம் பிணையப் பத்திரம் எழுதி வாங்கப்பட்டது. அதை மீறி குற்றச் செயல் களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை ஆணையர் அருண் சக்திக்குமார், திரு நெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக மதுரையில் யாரும் நியமிக்கப் படவில்லை.

தொடரும் கொலைகள்

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரப் பாளையம் அருகே வைகை ஆற்றுக்குள் டீ மாஸ்டர் ஒருவர், கீரைத்துறையில் ரவுடி வழி விட்டான், 2 நாட்களுக்கு முன்பு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் நந்தக்குமார், நேற்று ஜாமீனில் வெளியே வந்த ஆறுமுகம் என அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடக்கி ன்றன. இச்செயலில் ஈடுபடுவோர் பெரும் பாலும் பழைய குற்றவாளிகளே என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பழைய குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

எனவே, போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறு த்தியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது: மதுரை போன்ற பெரிய நகரங்களில், பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தால் மட்டுமே கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும். தற்போது துணை ஆணையர் அருண் சக்திக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பழைய குற்றவாளிகள் தங்களின் எதிரிகளை தாக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்கி யுள்ளனர்.

பழைய குற்றவாளிகளை கண்காணிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நியமிக்கப்பட்டுள்ள குற்றப்பிரிவு போலீஸார் தங்கள் பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

போக்குவரத்து துணை ஆணையர் பாபு, கூடுதலாக சட்டம் - ஒழுங்கை கவனித்து வந்தாலும், சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கான துணை ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT