தமிழக விவசாயிகளின் பிரச்சினை களை மத்திய அரசு தீர்க்க வில்லை என்பதற்காக குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என விவசாய சங்கங் கள் கூறி இருப்பது ஏற்புடையதல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியா ளர்களிடம் நேற்று அவர் கூறிய தாவது: சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் கூறியுள்ளனர். இதைத்தான் காங்கிரஸ் கட்சியும், திமுக வும் கடந்த சில மாதங்களாகவே கூறி வருகின்றன.
தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை மத்திய அரசு தீர்க்கவில்லை என்பதற்காக குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கூறி இருப்பது ஏற்புடையதல்ல.
யார் மூலமாவது தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் ரஜினிக்கு பாஜகவின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது என்றார்.